SIVAKASI WEATHER
சிவகாசி அருகே அகழாய்வில் 11-வது குழி தோண்டும் பணி தொடக்கம்

10-07-2022
சிவகாசி அருகே அகழாய்வில் 11-வது குழி தோண்டும் பணி தொடக்கம்

சிவகாசி அருகே அகழாய்வில் 11-வது குழி தோண்டும் பணி தொடங்கியது. இங்கு குவியல் குவியலாக மண்பாண்ட பொருட்கள் கிடைத்தன. சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 10 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. இதில் ஏராளமான கண்ணாடி வளையல்கள், பாசிமணிகள், புகைபிடிக்கும் கருவிகள், யானை தந்தம், சுண்ணாம்பு நிரப்பப்பட்ட பெரிய அளவிலான பானைகள், சிறிய அளவிலான 20-க்கும் மேற்பட்ட மண்குடங்கள் உள்ளிட்ட 1,700-க்கும் மேற்பட்ட அரிய வகையான பொருட்கள் கிடைத்துள்ளன. இந்தநிலையில் நேற்று புதிதாக 11-வது அகழாய்வு குழி தோண்டப்பட்டது. அதில் ஏராளமான மண்பாண்டகளாக பயன்படுத்தப்பட்ட ஓடுகள் குவியல் குவியலாக கிடைத்தது.

வேலைபாடுகளுடன் கூடிய மண்பாண்ட பொருட்கள், மண்குடங்கள், அதிக அளவில் கிடைத்ததை பார்க்கும்பொழுது பண்டைய காலத்தில் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலை பிரதானமாக செய்து இருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வீட்டின் சுவர் பகுதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் சமையலறையும், சமையலறை பாத்திரமும் சேதமடையாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இங்கு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Courtesy: Maalai Malar


News & Events
top