SIVAKASI WEATHER
1008 தீப விளக்கு ஊர்வலம்

21-12-2022
1008 தீப விளக்கு ஊர்வலம்

உலகில் அமைதி வேண்டியும், நல்ல மழை பெய்து நாடு செழிக்கவும், சிவகாசி மக்கள் நலம் மற்றும் தொழில் மேம்பட வேண்டி, 1008 தீப விளக்கு ஊர்வலம் நடைபெற்றது. சிறப்பு பூஜையுடன் சிவகாசி கடைக்கோயிலில் தொடங்கியது தீப ஊர்வலம். ஏராளமான பெண்கள் கையில் விளக்கு ஏந்தி, நான்கு ரதவீதிகளின் வழியே சென்று சிவகாசி மாரியம்மன் கோயிலை வந்தடைந்தனர். அங்கு மாரியம்மனுக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியை ஸ்ரீகாளீஸ்வரி மகளிர் மன்ற தலைவி திருமதி. விஜயமோகினி அவர்கள் முன்னின்று நடத்தினார்.


News & Events
top