SIVAKASI WEATHER
2022 rewind Sivakasi

31-12-2022
2022 rewind Sivakasi

ஜனவரியில் பத்திரகாளியம்மன் கோயில் பாலாலயம் நடைபெற்றது.
பிப்ரவரியில் சிவகாசி ஆன்மீக செம்மல் ராஜப்பன் அவர்கள் காலமானார்.
மார்ச் மாதம் சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயராக சங்கீதா இன்பம் பதவி ஏற்றார்.

ஏப்ரல், மே மாதங்களில் கடந்த இரண்டு ஆண்டுகள் கழித்து கொரானா தொற்று கட்டுப்பாடுகள் இல்லாமல் வழக்கம் போல் கோலாகலமாக நடைபெற்றது பங்குனிப் பொங்கலும், சித்திரைப் பொங்கலும்.

ஜூன் மாதம் வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் செயல் பட துவங்கியது.
ஜூலை ஆகஸ்ட்டில் நடைபெற்ற மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முதன்மை பொறுப்பாளராக செயல்பட்டார் சிவகாசி அனந்தராம்.

ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது 75ம் ஆண்டு சுதந்திர தின விழா.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தீபாவளி சீசன் இரண்டு வருடங்கள் கழித்து களைகட்டியது.

நவம்பர் மாதம் யாரும் எதிர்பாராத விதமாக பத்திரகாளியம்மன் கோயில் ராஜகோபுரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அம்மனின் அருளால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

டிசம்பர் மாதம் சிவகாசி பழம்பெரும் புகைப்பட கலைஞர், தொழிலதிபர் திருமதி. காஞ்சனா போஸ் மறைவு. முன்னாள் MP ராதாகிருஷ்ணன் மறைவு. திருப்பணி முடிந்து சார கம்புகள் பத்திரகாளியம்மன் கோயில் ராஜகோபுரத்தில் இருந்து அகற்றம்.

2022ம் ஆண்டில் பல மாணவர்கள் பல போட்டிகளில் சாதித்து சிவகாசிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். 2023ம் ஆண்டும் சிவகாசி மக்களுக்கு தித்திப்பாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

- சிவகாசி வீக்லி


News & Events
top