என்ன வாழ்க்கைடா இது... I Miss Sivakasi |
28-05-2023 சென்னையிலிருந்து திரு.காளிராஜன் எழுதுகிறார், என்ன வாழ்க்கைடா இது கந்தக பூமியே, எனதருமை கந்தக பூமியே, கந்தக பூமியே, எனதருமை கந்தக பூமியே, அம்மா கட்டிக் குடுக்குற தயிர் சாதம், டீலக்ஸ் மூளை புரோட்டா, சூர்யா காபி பார், பூரி, உளுந்த வடை, பச்ச பழம் கடை பச்ச பழம், மெரிட் எஸ் டி டி பூத், செட்டிநாடு மெஸ் மதிய சாப்பாடு, செல்வம் மெஸ் தோசை, பாய் கடை வடை, காப்பிக்கு இராமர் கடை, இரவுக்கு பால் சோறு, முக்கு கடை ராஜேஸ்குமார் நாவல், ரவி எலக்ட்ரிக்கல்ஸ் அக்கவுண்ட், உலக நடப்பை ஆராய பத்து மணிககப்புறம் கோபால் சைக்கிள் கடை தள்ளுவண்டி, சிவன் மாட வீதி நூலகம், கோவப் பட்டா சிவன் கோயில், பயந்தா கருப்பசாமி கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ரோடு அய்யப்பன் கோவில், வருசத்துக்கு மூனு நாள் குல தெய்வம் கோயில், காமாட்சியம்மன் கோயில்பிள்ளையார், குளிக்க இரட்டை கிணறு, ஆத்துபாலம், காத்திருக்க வடக்கு ரத வீதி, சி.இ.நா.வி பார் கம்பி, தமிழ் கத்துக் குடுத்த தமிழ் ஆசான் மாட சாமி, இரண்டு வருசமா இயந்திரவியல் ஆய்வக கொத்து சாவி, பரிட் சை எழுத காமாக் கால், பிரம்புக்கு திருப்பதி வாத்தியார், பொருட் காட்சிக்கு டிக்கெட் கிழிகக, நாடககொட்டையில் கிட்டி ஸ்கேட்டிங், காத்துல அலை பாயுற கேசம், கல்லுரி பஸ்ல லெஸ்லி, திருமங்கலம் பஸ்ல கோரஸ், மத்தியான சாப்பாட்டுக்கு சுந்தர ஈஸ்வரன் வீடு, புல்லட்டுக்கு மாரியப்பன் அண்ணாச்சி, பீர் அடிக்க பிரபா ஒயின் சாப், இல்லாட்டி முகில், பாரபட்டி சாந்தி தியேட்டர், நட்புக்கு சுந்தர ஈஸ்வரன், சீட்டு விளையாட மணி வீடு, தோள் கொடுக்க பட்ட முத்து, கையெழுத்து இல்லாமல் எடுத்துச் சென்ற நூலக புத்தகம், பள்ளித் தோழிகள், ஒன்னாம் வகுப்பு பாண்டிய லட்சுமி டீச்சர், சுத்திப் பாக்க பெரியகுளம் விளாம்பட்டி ரோடு வழியா, கும்சன் ஜிம், அப்பா பெல்ட், டூப்ளிகேட் ரேங்க் கார்டு, ஸ்கூல் பீஸ் கட்ட ட்ரை சைக்கிள், பக்கடாவுக்கு சண்டை போட்ட தம்பி, 12ம் வகுப்பு சி பிரிவு 2000 குறளமுதம், சிறட்டை மஸ்தான் பற்பொடி, டாம் அண்ட் ஜெர்ரி, சக்திமான், யூகி சேது, சந்தர காந்தா, டோர் வச்ச சாலிடர் டீவி, தூங்க தேக்கு கட்டில், ஊசி போட ஜெயபிரகாஸ் டாக்டர், கொசு கடிச்சாலும் பரவாயில்லைனு படுத்து தூங்குன சிவகாசி பேருந்து நிலையம், சிவன் விரும்பி வந்தமர்ந்த சிவகாசி,எல்லாத்தையும், சாத்தூர்ல இருந்து சென்னைக்கு கிளம்புற இரயில்ல வெறும் நூற்றி எட்டு ரூபாய் டிக்கெட்டுல தொலைச்சிட்டேன், இது எல்லாமே திரும்ப கிடைச்சாலும் , என்னாலஅனுபவிக்க முடியுமான்னு தெரியல. என்ன வாழ்க்கைடா இது... |