கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக திருவிழா |
06-07-2023 சிவகாசி கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக திருவிழா சிவகாசி கருப்பசாமி கோயிலில் கருப்பனை வேண்டி தண்ணீர் தெளித்து மை வைத்து வந்தால் பயமே பயந்தோடி விடும், தீராத நோய் எல்லாம் பறந்தோடி விடும். இங்கு அனைத்து மதத்தினரும், வெளி மாநில பக்தர்களும் நம்பிக்கையுடன் கருப்பனை வேண்டி செல்வதுண்டு. மற்ற கோயில் கும்பாபிஷேக திருவிழாவில் புனித நீரை ஓஸ் உதவியுடன் பீச்சி அடிப்பது அல்லது ட்ரோன் மூலம் தெளிப்பர், ஆனால் சிவகாசி கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகத்தில் கோயில் வழக்கப்படி தண்ணீர் தெளிக்கப்பட்டது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. |