சிவகாசியில் கலெக்டர் ஆய்வு |
06-08-2023 சிவகாசியில் கலெக்டர் ஆய்வு விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிவகாசி ஊராட்சி ஒன்றியம், காரிசேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பில் மத்திய சேனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல்கூடம் கட்டப்பட்டு வருவதையும், காரிசேரி கிராமத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் உறிஞ்சுகுழிகள் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், 15-வது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புனரமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தினையும் கலெக்டர் ஆய்வு செய்தார். |