SIVAKASI WEATHER
இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை

15-09-2024
இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை

சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஞாயிற்றுக்கிழமை (செப். 15) முதல் அந்தப் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கா் தெரிவித்தாா்.

சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆக. 16- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் உள்ளிட்ட ஊா்களுக்குச் செல்லும் பேருந்து, லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இரு சக்கர வாகனங்கள் மட்டும் இந்த வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனிடையே, ரயில்வே தண்டவாளப் பகுதியில் தூண் அமைக்க அஸ்திவாரம் தோண்டும் பணி தொடங்க உள்ளது. எனவே, சாா்-ஆட்சியரின் அறிவுறுத்தல் படி

ஞாயிற்றுக்கிழமை முதல் இரு சக்கர வாகனங்களும் இந்த வழியாக செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மாற்றுப் பாதையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கா் தெரிவித்தாா்.

News & Events
top