SIVAKASI WEATHER
களை கட்ட துவங்கியது பட்டாசு விற்பனை

06-10-2024
களை கட்ட துவங்கியது பட்டாசு விற்பனை

தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் சிவகாசி பகுதியில் பட்டாசு வியாபாரம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பட்டாசு வியாபாரிகள் நேரடியாக பட்டாசு கொள்முதல் செய்வதற்காக சிவகாசிக்கு வரத் துவங்கியுள்ளனர்.

ஒரு சில வியாபாரிகள் சிவகாசியில் தங்கி தீர விசாரித்து பட்டாசு வாங்கி செல்வர். அந்த வகையில் ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட வியாபாரங்களும் சூடு பிடித்துள்ளது. மேலும் வீடுகளுக்கு வாங்குவதற்கும் வெளி மாவட்டத்தினர் சிவகாசிக்கு வரத் துவங்கியுள்ளனர். அதனால் தற்போது சிவகாசியில் பட்டாசு வாங்க வரும் வியாபாரிகள், மக்களால் நகர் பரபரப்பாக உள்ளது.

தாமதமாக வந்தால் கேட்கின்ற வெரைட்டி பட்டாசுகள் கிடைக்காது என்பதால் அடுத்தடுத்த வாரங்களில் சிவகாசி பகுதியில் பட்டாசு வியாபாரம் இன்னும் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


News & Events
top