சிவகாசியில் 2025 டைரி, காலண்டர் உற்பத்தி மும்முரம் |
14-12-2024 சிவகாசியில் 2025 டைரி, காலண்டர் உற்பத்தி மும்முரம் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் 2025ம் ஆண்டுக்கான டைரி மற்றும் காலண்டர் உற்பத்தி பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு காலண்டர்களின் விலை 8% அளவிற்கு உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவகாசியில் 800க்கும் அதிகமான அச்சகங்களில் நோட்டுப் புத்தகங்கள், டைரிகள், காலண்டர்கள், பில் புக், பேக்கிங் அட்டைகள், அழைப்பிதழ்கள், துண்டு பிரசுரங்கள் ஆகியவை அச்சடிக்கப்பட்டுகிறது. தற்போது டைரி மற்றும் காலண்டர் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. |