SIVAKASI WEATHER
சிவகாசி டு கோவில்பட்டி: ஒரே உரிமத்தில் தீப்பெட்டி மூலப்பொருள் எடுத்துச்செல்ல ஏற்பாடு

22-02-2025
சிவகாசி டு கோவில்பட்டி: ஒரே உரிமத்தில் தீப்பெட்டி மூலப்பொருள் எடுத்துச்செல்ல ஏற்பாடு

சிவகாசியில் அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்கள் சார்பில், தீப்பெட்டி தொழில் நுாற்றாண்டு விழா நடந்தது.

விழா மலர்

விழாக்குழு தலைவர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். சங்க தலைவர் விஜய ஆனந்த் வரவேற்றார். அசோகன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா, கலெக்டர் ஜெயசீலன், எஸ்.பி., கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். தீப்பெட்டி தொழில் நுாற்றாண்டு விழா மலரை, அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு வெளியிட்டனர்.

அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:

பொறியியல் படிப்பு படித்தவர்கள் கூட வேலை தேடி வரும் நிலையில், படிப்பறிவு இல்லாதவர்களுக்கும் 100 ஆண்டுகளாக தொடர்ந்து வாழ்க்கை கொடுத்து வருவது தீப்பெட்டி, பட்டாசு தொழில் தான். கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை சிவகாசி, சாத்துாரில் இருந்து எடுத்துச் செல்லும் போது, இரு மாவட்டங்களிலும் அனுமதி பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்களுக்கு, ஒரே உரிமத்தில் மூலப்பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

News & Events
top