SIVAKASI WEATHER
Arasan Ganesan Polytechnic College - Handball Champion 2011

09-02-2011
மாநில அளவிலான கைப்பந்து: அரசன் கணேசன் பாலிடெக்னிக் வெற்றி

சிவகாசி, பிப். 8: பாலிடெக்னிக்களுக்கிடையே மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்கினிக் வெற்றி பெற்றது.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில பாலிடெக்னிக்களுக்கிடையே கைப்பந்துப் போட்டி நாகர்கோவில் காமராஜ் பாலிடெக்னிக்கில் நடைபெற்றது. இதில் மண்டல அளவில் வெற்றி பெற்ற பத்து அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் அணி, நாகர்கோவில் பாலிடெக்னிக் அணியை 2:1 என்ற செட் கணக்கில் வென்றது.

வெற்றி பெற்ற சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் அணியில் இடம் பெற்றுள்ள மாணவர்களை தாளாளர் ஜி.அசோகன், முதல்வர் டி.பாலசுப்பிரமணியன், உடற்கல்வி இயக்குநர் மதனகோபால் உள்ளிட்டோர் பாராட்டினர்.

News & Events
top