SIVAKASI WEATHER
சர்வதேச பளு துாக்கும் போட்டி தங்கம் வென்ற சிவகாசி பெண்

13-12-2025
சர்வதேச பளு துாக்கும் போட்டி தங்கம் வென்ற சிவகாசி பெண்

சிவகாசி அருகே நாரணாபுரம் கண்ணா நகரை சேர்ந்த அச்சக தொழில் செய்து வரும் தவசிக்குமார், 56. இவரது மனைவி பாண்டிமாதேவி, 50; உணவியல் நிபுணராக உள்ளார். தம்பதியின் இரு மகன்களுக்கும் திருமணமாகி, பேரன்கள் உள்ளனர்.

பாண்டிமாதேவி, நவ., 30ல் தாய்லாந்து நாட்டில் நடந்த சர்வதேச அளவிலான பளு துாக்கும் போட்டியில் பங்கேற்றார். இதில், 20 நாடுகளிலிருந்து, 250க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனையர் பங்கேற்றனர்.

இந்தியாவிலிருந்து சென்ற 19 பேரில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து இவர் பங்கேற்றார். வயது பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியில் 40 -- 50 வயதுக்கு உட்பட்டோருக்கான தனிப்பிரிவில், 310 கிலோ எடையை துாக்கி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.


News & Events
top