SIVAKASI WEATHER
ஆனி தேரோட்ட திருவிழா

05-07-2026
ஆனி தேரோட்ட திருவிழா

108 திவ்ய தேசத்தில் ஒன்றான நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ திருவிழா ஜூன் 25 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமிகள் சிம்ம, யானை, சேஷ உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா நடந்தது. 9ம் நாள் தேரோட்டம் 03/07/2026ல் நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் நின்ற நாராயண பெருமாள், செங்கமலத்தாயார் எழுந்தருள பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற பக்தி கோஷம் முழங்கியபடி தேரை இழுத்து வழிபட்டனர். பெண் பக்தர்கள் பஜனை பாடியும், கோலாட்டம் ஆடியும் வந்தனர். தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. தொடர்ந்து திருவிழா மூன்று நாட்களுக்குப் பின்பு புஷ்ப யாகத்துடன் நிறைவு பெறுகிறது.


News & Events
top