| சிவகாசி அபிஷேக் மாநில அளவிலான உயரிய விருது வென்று சாதனை |
18-07-2026 சிவகாசி அபிஷேக் மாநில அளவிலான உயரிய விருது வென்று சாதனை தமிழகத்தின் இளம் சுழற்பந்து வீச்சாளர் சிவகாசி அபிஷேக் மாநில அளவிலான உயரிய விருது வென்று சாதனை! சிவகாசியை சேர்ந்த திறமையான இளம் சுழற்பந்து வீச்சாளர் S.அபிஷேக், 2025–26 கிரிக்கெட் பருவத்திற்கான தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) வழங்கும் "ஈஸ்வரி சுப்ரமணியன் அறக்கட்டளை – சிறந்த சுழற்பந்து வீச்சாளர் (Under-17/16)" என்ற உயரிய விருதைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார். TNCA இடைமாவட்ட போட்டிகளில் அபாரமான ஆட்டத்திறன் வெளிப்படுத்தி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதன் மூலம் இந்த அரிய அங்கீகாரத்தை அவர் பெற்றுள்ளார். இந்த சாதனை, தமிழக கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. Under-17/16 மாநில அளவிலான உயரிய விருது வென்ற S.அபிஷேக் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🎉👏 மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய அணியில் இடம்பிடிக்க வாழ்த்துகள்! |