SIVAKASI WEATHER
Eye donation awareness programme 2011 - SRNM College

21-02-2011
கண்தான விழிப்புணர்வு முகாம்

சிவகாசி, பிப். 20: சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம், சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம், லயன்ஸ் கிளப் ஆப் சிவகாசி சென்ட்ரல் ஆகியவை இணைந்து மாரனேரியில் கண்தான விழிப்புணர்வு முகாமை நடத்தின.

நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவர் ஏ. அமிர்தா விஜயன் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் தனுஜா வரவேற்றார்.

கண் தான மாவட்டத் தலைவர் ஜெ.கணேஷ் கண்தானத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து பேசினார்.

கண்தானம் குறித்த கேள்விகளுக்கு சரியான பதில் கூறியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பட்டாசு நகர் அரிமா சங்கத் தலைவர் ராஜேஷ், துணைத் தலைவர் ராமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திட்ட அலுவலர் மஞ்சு நன்றி கூறினார்.

News & Events
top