Arasan Ganesan College of Education - 2011
23-02-2011 கல்வியியல் கல்லூரி மாணவிகளுக்குப் பாராட்டு சிவகாசி, பிப். 21: சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி மாணவிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. 2009-2010-ம் கல்வியாண்டில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதனை புரிந்த மாணவிகள் பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சிக்குத் தாளாளர் ஜி.அசோகன் தலைமை வகித்தார். முதல்வர் ஏ.பி.செல்வகுமார் வரவேற்றார். மதுரை ஸ்ரீ சாதனா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி இயக்குநர் நடனகுருநாதன் மாநில அளவில் ஏழாமிடம் பெற்ற மாணவி பி.முருகேஸ்வரி மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பாராட்டிப் பரிசு வழங்கினார். பேராசிரியர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார். |